டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

நாடளாவிய ரீதியில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024ஆம் ஆண்டில் பதிவான டெங்கு (Dengue) நோயாளர்களின் எண்ணிக்கை 21,000ஐ தாண்டியுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு (Epidemiology Unit)தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு ஏப்ரல் வரையான காலப்பகுதியில் மாத்திரம் 21,028 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில் அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் கொழும்பு (Colombo) மாவட்டத்தில் இருந்தே அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு | Increase In Number Of Dengue Patients

மேல் மாகாணத்தில் (Western Province) 7,547 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில், மாகாண ரீதியாக குறித்த மாகாணத்திலே அதிகபட்சமாக ஏப்ரல் மாதத்தில் 989 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இந்நிலையில், இலங்கையின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கணிசமான மழை பெய்து வருவதால் டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருக்கவும் நுளம்புகள் பெருகும் இடங்களை இல்லாதொழிக்கவும் சுகாதார அதிகாரிகள் மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.