புத்தளத்தில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு..!

புத்தளத்தில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு..!

புத்தளம் - மஹகும்புக்கடவல , ஹோம்ப கஸ்வெவ பகுதியில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி குடும்பஸ்தர் ஒருவர்  உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவமானது நேற்று (13) மாலை இடம்பெற்றுள்ளது.

இதன்போது மஹகும்புக்கடவல , ஹோம்ப கஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 56 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த நபர் விவசாய நிலத்தில் வேலை செய்துகொண்டிருந்த போது மின்னல் தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளான நபரை அங்கிருந்தவர்கள் உடனடியாக மஹகும்புக்கடவல கிராமிய வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், அவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திடீர் மரண விசாரணைகளின் பின்னர் சடலம் அவரது மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டதாக புத்தளம் பகுதிக்கு பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி கூறியுள்ளனர்.