வயிற்றில் 75 போதைமாத்திரைகள் : கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பெண்!!

வயிற்றில் 75 போதைமாத்திரைகள் : கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பெண்!!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் போதைமாத்திரைகளை உட்கொண்டு அவற்றை கடத்த முயன்ற வெளிநாட்டுப் பெண் ஒருவரை இலங்கை சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 38 வயதான மடகாஸ்கர் நாட்டை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

இவர் சுமார் 75 கொக்கைன் எனப்படும் போதைப்பொருள் பக்கெற்றுக்களை விழுங்கியதாக சந்தேகிக்கப்படுகிறது.

இதன் மதிப்பு சுமார் ரூ. 35 மில்லியன் ஆகும். கொக்கைன் எனப்படும் போதைப்பொருளை மாத்திரைகள் வடிவில் சிறு பொதிகளாக சுற்றி விழுங்கியுள்ளார்.

இதனையடுத்து அவர் விழுங்கிய போதைப்பொருள் மாத்திரைகளை பிரித்தெடுப்பதற்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வயிற்றில் 75 போதைமாத்திரைகள் : கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பெண் | Woman Arrested With 75 Swallowed Cocaine Capsulesசந்தேகநபரின் உடலில் இருந்து விழுங்கப்பட்ட போதைப்பொருள் காப்ஸ்யூல்கள் பிரித்தெடுக்கப்பட்ட பின்னர், மேலதிக விசாரணைக்காக அவர் இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படுவார் என தெரிவிக்கப்படுகிறது.