இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளின் விலை குறைப்பு...!

இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளின் விலை குறைப்பு...!

நாட்டில் உள்ளூர் முட்டைகளின் விலை அதிகரிப்பு காரணமாக இந்தியாவிலிருந்து முட்டைகள் இறக்குமதி செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, இறக்குமதி செய்யப்படும் இந்திய முட்டைகளின் விலை குறைக்கப்பட்டுள்ள அதேவேளை, உள்ளூர் முட்டைகளின் விலையும் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக 40, 45 ரூபாவாகக் குறைக்கப்பட்ட நாட்டு முட்டையின் விலை குறைவடைந்திருந்த போதும் அண்மைய தினங்களில் நாட்டு முட்டையின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

அந்தவகையில், புத்தாண்டின் போது 50 முதல் 60 ரூபா வரை நாட்டு முட்டையின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக முட்டைகளை கொள்வனவு செய்வதில் மக்கள் பெரும் இன்னல்களை எதிர்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், மக்களுக்கு தேவையான முட்டைகளை தட்டுப்பாடின்றி வழங்கவும், மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையிலும் இந்தியாவிலிருந்து முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டன.

இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளின் விலை குறைப்பு...! | Indian Egg Import In Srilanka Price Reduction Tooதவிரவும், முட்டை ஒன்றின் விலையை 42 ரூபாவில் இருந்து 36 ரூபாவாக குறைத்து விற்பனை செய்யவும் லங்கா சதொச நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.