
இலங்கையில் புத்தாண்டில் இடம்பெற்ற கோர சம்பவம்...பரிதாபமாக உயிரிழந்த பெண்கள்!
ஹலி-ஏல ஸ்ரீ வீரசக்தி விநாயகர் ஆலயத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்த விபத்து சம்பவத்தில் இன்றையதினம் (14-04-2024) இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த கார் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டை முன்னிட்டு இன்று காலை கொழும்பில் இருந்து பதுளை நோக்கி வந்த கார் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் 51 மற்றும் 62 வயதுடைய இரண்டு பெண்களே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஹலியாலா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.