இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட பயங்கர மோதல்: இளைஞரொருவர் கொலை!

இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட பயங்கர மோதல்: இளைஞரொருவர் கொலை!

இரத்தினபுரி - பலாங்கொடை பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் பெட்டிகலவத்த பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட பயங்கர மோதல்: இளைஞரொருவர் கொலை! | Clash Between The Two Groups One Died Balangoda

சம்பவத்தில் காயமடைந்த மேலும் இருவர் இரத்தினபுரி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் இரண்டு குழுக்களுக்கிடையே நிலவிய முரண்பாட்டின் காரணமாக நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.