மில்லியன் கணக்கில் வருமானத்தை ஈட்டிய இலங்கை ; நெடுஞ்சாலை வருமானம் உயர்வு

மில்லியன் கணக்கில் வருமானத்தை ஈட்டிய இலங்கை ; நெடுஞ்சாலை வருமானம் உயர்வு

கடந்த மூன்று தினங்களில் நெடுஞ்சாலைகளின் மூலம் கிடைத்த வருமானம் அதிகரித்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

நெடுஞ்சாலை செயல்பாடுகள் பராமரிப்பு மற்றும் முகாமைப் பிரிவின் இயக்குநர் ஆர். ஏ. டி. கஹடபிட்டிய இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

மில்லியன் கணக்கில் வருமானத்தை ஈட்டிய இலங்கை ; நெடுஞ்சாலை வருமானம் உயர்வு | Increase In Highway Revenue

இதன்படி, மொத்தம் 126 மில்லியன் ரூபாய் வருமானம் நெடுஞ்சாலைகளின் மூலம் பெறப்பட்டுள்ளதாக குறித்த சபை அறிவித்துள்ளது.

கடந்த 10, 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் இந்த வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த காலப்பகுதியில், 366,000 வாகனங்கள் நெடுஞ்சாலைகளில் பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.