கள்ளக்காதல் உறவால் 25 வயது இளைஞன் கொலை

கள்ளக்காதல் உறவால் 25 வயது இளைஞன் கொலை

கொழும்பு மொரட்டுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுபெத்த தன்தெனிய தோட்டம் பிரதேசத்தில் தனிப்பட்ட தகராறு காரணமாக இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கள்ளக்காதல் உறவு காரணமாக இந்த தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞரே இந்தக் கொலையைச் செய்துள்ளார்.

கள்ளக்காதல் உறவால் 25 வயது இளைஞன் கொலை | A 25 Year Old Man Was Killed Due To Adultery

சம்பவத்தில் , ஹர்ஷன குமார என்ற 27 வயதுடைய இளைஞனே உயிரிழந்தவராவார். குறித்த மோதலில் மற்றுமொருவர் காயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்த இளைஞன் தனது சித்தியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தமை தெரியவந்துள்ளது.

கள்ளத் தொடர்பு பிரச்சனையால் இந்த கொலை இடம்பெற்றுள்ளதக்க தெரிவித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.