நாட்டில் போதைக்கு அடிமையானவர்களில் 40,000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

நாட்டில் போதைக்கு அடிமையானவர்களில் 40,000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அளவில் சுமார் 40,000 பேர் போதைப்பொருள் பாவனையால் உயிரிழக்கின்றனர் என தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

இவர்களில் பெரும்பான்மையானோர் கஞ்சா பாவனையை நாடியுள்ளதாகவும், கஞ்சா பாவனையில் ஈடுபட்டவர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்து ஐம்பதாயிரம் எனவும், ஏறக்குறைய ஒரு இலட்சம் பேர் ஹெரோயின் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாக ஆபத்தான மருந்துகளுக்கான தேசிய போதைப்பொருள் வாரியம் தெரிவித்துள்ளது.

நாட்டில் போதைக்கு அடிமையானவர்களில் 40,000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு | Increasing Number Of Drug Addicts In The Country

அத்துடன் பெரும்பான்மையான பாடசாலை மாணவர்களிடையே புகையிலையை பாவிக்கும் போக்கு காணப்படுகின்ற போதிலும் பாடசாலைகளில் ஐஸ் போன்ற போதைப்பொருட்கள் தொற்று நோயாக பரவும் அபாயம் இன்னும் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் மொத்த சனத்தொகையில் 15 இலட்சம் பேர் புகையற்ற புகையிலை பாவனையிலும், இருபத்தைந்தாயிரம் முதல் முப்பதாயிரம் பேர் வரை பல்வேறு போதைப்பொருள் பாவனையிலும், ஈடுபட்டுள்ளனர் என்றும் அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.