பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சன்மானம்!!

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சன்மானம்!!

குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு சன்மானம் வழங்கப்பட உள்ளதாக மோட்டார் போக்குவரத்து பொலிஸ் பிரிவிற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹபுகொட (Indika Hapugoda) தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்படும் உத்தியோகத்தர்களுக்கு நிதி ரீதியான சன்மானம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதி ஒருவரை கைது செய்யும் பொலிஸ் உத்தியோகத்தருக்கு 5000 ரூபா சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சன்மானம் | Drunk Drivers Will Be Arrested Police Will Getஅத்துடன் தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தில் குடிபோதையில் வாகனம் செலுத்துவோரை கண்டுபிடிப்பதற்காக சுமார் ஒன்றரை லட்சம் இரத்த பரிசோதனை சாதனங்கள் பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

மேலும் குடிபோதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்வதற்காக 1500 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.