சந்தையில் செவ்விளநீருக்கு அதிக கிராக்கி

சந்தையில் செவ்விளநீருக்கு அதிக கிராக்கி

வவுனியா சந்தையில் செவ்விளநீர் ஒன்று 300 ரூபா வரை அதிக விலைக்கு விற்கப்படுவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை மிகச் சிறிய செவ்விளநீர் 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் ஐஸ் மற்றும் சர்க்கரை சேர்த்த செவ்விளநீர் 350 ரூபாய்க்கு விற்கப்படுகின்றதாக குறிப்பிட்டுள்ளனர்.

சந்தையில் செவ்விளநீருக்கு அதிக கிராக்கி | Increase In Coconut Water Price In Sri Lanka

நாட்டில் நிலவும் அதிக வெப்பத்தால் செவ்விளநீருக்கான தேவை அதிகரித்துள்ளதால், அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.