பண்டிகையை முன்னிட்டு எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

பண்டிகையை முன்னிட்டு எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

நாட்டில் எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது எரிபொருள் நிலையங்களினால் தொடர்ச்சியாக எரிபொருள் விநியோகம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

பண்டிகையை முன்னிட்டு எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு! | Continuous Fuel Supply Sri Lanka Ahead Festival

நாட்டின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்வதற்காக, பிரதான முனையங்கள் மூலம் எரிபொருள் இருப்புக்களை இறக்குமதி செய்து கிடங்குகளில் போதுமான இருப்புக்களை பராமரிக்க நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும், எரிபொருள் இருப்புக்களை பராமரிப்பது தொடர்பாக அனைத்து எரிபொருள் நிலைய உரிமையாளர்களுக்கும் அறிவித்துள்ளது.

பண்டிகையை முன்னிட்டு எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு! | Continuous Fuel Supply Sri Lanka Ahead Festival

விநியோகஸ்தர்களின் எரிபொருள் ஆர்டர் செய்யும் பணியை எளிதாக்கும் வகையில், காசோலை மூலம் பரிவர்த்தனை செய்ய வரும் 15ம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியில், எரிபொருள் விநியோக நடவடிக்கைகளுக்காக போதுமான டேங்கர்களை ஈடுபடுத்த இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனைய நிறுவனம் தீர்மானித்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.