வீட்டிலிருந்து சென்ற யுவதி மாயம்... பொதுமக்களின் உதவியை நாடியுள்ள உறவுகள்!

வீட்டிலிருந்து சென்ற யுவதி மாயம்... பொதுமக்களின் உதவியை நாடியுள்ள உறவுகள்!

நுவரெலியா பிரதேசம் - டயகம பகுதியை சேர்ந்த யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த யுவதி இன்றையதினம் (10-04-2024) காலை அக்கரப்பத்தனை நகருக்கு மருந்தகம் ஒன்றுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு தனது வீட்டில் இருந்து சென்றுள்ளார்.

வீட்டிலிருந்து சென்ற யுவதி மாயம்... பொதுமக்களின் உதவியை நாடியுள்ள உறவுகள்! | Missing Young Woman Dayagamaஇதேவேளை, மாலை வரை வீடு திரும்பாத நிலையில் டயகம பொலிஸ் நிலையத்தில் குடும்பத்தினரால் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், யாராவது யுவதியை கண்டால் அண்மையில் இருக்கும் பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கும் படி குடும்ப உறவுகள் கேட்டுக் கொள்கின்றார்கள்.