முல்லைத்தீவில் மாடுகளை திருடிய நபர் பொதுமக்களால் மடக்கி பிடிப்பு!!

முல்லைத்தீவில் மாடுகளை திருடிய நபர் பொதுமக்களால் மடக்கி பிடிப்பு!!

முல்லைத்தீவு - விசுவமடு மாணிக்கபுரம் பகுதியில் மக்களின் வளர்ப்பு மாடுகளை திருடி இறைச்சிக்காக விற்பனை செய்த நபர் ஒருவரை கிராமமக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மாணிக்கபுரம் பகுதியில் மக்களின் வாழ்வாதாரமாக காணப்படும் பசுமாடுகள் சுமார் 11 பேரின் கால்நடைகள் காணாமல் இவ்வாறு காணாமல்போயுள்ளதாக மக்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்.

இந்த நிலையில் மக்களின் கால்நடைகளை களவாக படித்து தேரவில் பகுதியில் இருக்கும் மாடு இறைச்சி வியாபாரி ஒருவருக்கும் கொடுக்கும் திருட்டுச்சம்பவம் தொடர்பில் மக்களுக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

இதனடிப்படையில் விழிப்படைந்த கிராம மக்கள் இரவு நேரத்தில் கண்விழித்து குறித்த திருடனை பிடித்துள்ளார்கள்.

முல்லைத்தீவில் மாடுகளை திருடிய நபர் பொதுமக்களால் மடக்கி பிடிப்பு | Steal Cattle And Sell Them For Meatஇந்நிலையில் இரவு வேளை வளர்ப்பு மாடு ஒன்றினை பிடித்து இறைச்சிக்காக சந்தேகநபர் கடத்திசெல்ல முற்பட்டுள்ளார்.

இவர் மாணிக்கபுரத்தில் வசிக்கும் நபர் எனவும் இரவு நேரங்களில் வீட்டு காணிகளுக்கு முன்னால் நிக்கும் மாடுகளை பிடித்து இறைச்சிற்கு விற்பனை செய்து வந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் கிராம மக்களின் ஒன்றிணைந்த நடவடிக்கையினால் சந்தேகநபர் மாட்டுடன் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.