ஆரம்பமாகப்போகும் 2024 எல்.பி.எல் கிரிக்கெட் தொடர்: வெளியானது போட்டி அட்டவணை!!

ஆரம்பமாகப்போகும் 2024 எல்.பி.எல் கிரிக்கெட் தொடர்: வெளியானது போட்டி அட்டவணை!!

2024 லங்கா பிரீமியர் லீக்(LPL) போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இதன் ஆரம்ப விழா ஜூலை மாதம் முதலாம் திகதி நடைபெறவுள்ளதுடன் அன்றைய தினம் கண்டி மற்றும் தம்புள்ளை அணிகளுக்கிடையில் முதலாவது போட்டி நடைபெறவுள்ளது.

அதேவேளை, ஜூலை 22ம் திகதி வரை நடைபெறும் இப்போட்டியில் இறுதிப் போட்டி உட்பட 24 போட்டிகள் நடைபெறவுள்ளன.

அத்துடன், 2024 லங்கா பிரீமியர் லீக் போட்டிகள் கண்டி பல்லேகல, தம்புள்ளை மற்றும் கொழும்பு ஆர் பிரேமதாச ஆகிய மைதானங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஆரம்பமாகப்போகும் 2024 எல்.பி.எல் கிரிக்கெட் தொடர்: வெளியானது போட்டி அட்டவணை | 2024 Lpl Match Scheduleஅதன்படி, குறித்த தொடரின் இறுதிப் போட்டி ஜூலை 22ஆம் திகதி கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.