
புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைபிறை பார்க்கும் மாநாடு இன்று!
ஹிஜ்ரி 1445ஆம் ஆண்டின் புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைபிறை பார்க்கும் மாநாடு இன்று மாலை இடம்பெறவுள்ளது.
மஹ்ரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கொழும்பு பெரிய பள்ளிவாசலின் ஏற்பாட்டில் அதன் தலைவர் தாஹிர் ரஷீன் தலைமையில் குறித்த மாநாடு நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில், பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழுத் தலைவர் அஷ்ஷெய்க் ஹிஸாம் உட்பட பிறைக்குழு உறுப்பினர்கள், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிரதிநிதிகள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரிகள், வளிமண்டவியல் திணைக்கள சிரேஷ்ட அதிகாரி உள்ளிட்ட பலர் பங்கேற்கவுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் ஷவ்வால் மாதத்திற்கான தலைபிறை தென்படுமாயின் பூரண ஆதாரத்துடன் 011 24 32 110, 011 24 51 245 மற்றும் 0777 35 37 89 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி அறிவிக்க முடியும்.