
பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்
நாட்டின் சில பகுதிகளில் இன்று (09) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இன்று (09) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் மேல், மத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களின் சில இடங்களிலும் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.