அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்ய அனுமதி!

அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்ய அனுமதி!

அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்வதற்கு அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

தனது முகநூல் கணக்கில் விசேட குறிப்பொன்றை இணைத்து நாடளுமன்ற உறுப்பினர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அதிக திறன் கொண்ட இந்த மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதி இலங்கை காவல்துறையின் அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களை கொள்வனவு செய்வதற்கு பயன்படுத்தப்படவுள்ளதாகவும், அது தொடர்பான விசேட தேவைகளுக்கு பயன்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, இந்த திட்டத்தை செயற்படுத்துவதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் அவர் நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.

அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்ய அனுமதி | Register High Capacity Motorcycles Sri Lanka