வவுனியாவில் தொடருந்து மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

வவுனியாவில் தொடருந்து மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

வவுனியா - ஓமந்தை பகுதியில் தொடருந்துடன் பிக்கப் ரக வாகனமொன்று மோதி விபத்துக்குள்ளாகியதில் படுகாயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று (07.04.2024) இடம்பெற்றுள்ளது.

மன்னார் - நானாட்டன் பகுதியைச் சேர்ந்த ராஜன் நிரோஜன் என்ற 32 வயதுடையவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை வவுனியா - யாழ்ப்பாணத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தொடருந்துடன் ஓமந்தை - பன்றிகெய்தகுளம் பகுதியில் தொடருந்து கடவையைக் கடக்க முயன்ற பிக்கப் ரக வாகனம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

/train-accident-in-vavuniya-

இதன்போது பிக்கப் ரக வாகனத்தின் சாரதி படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையிலேயே, அவர் நேற்றையதினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.