மர்மமாக உயிரிழந்த 4 வயது பெண் குழந்தை: நால்வர் கைது!!

மர்மமாக உயிரிழந்த 4 வயது பெண் குழந்தை: நால்வர் கைது!!

கொழும்பு - மாளிகாவத்தை பகுதியில் ஒப்பந்தம் ஒன்றின் மூலம் நெருங்கிய உறவினருக்கு வழங்கப்பட்ட 4 வயது 7 மாத பெண் குழந்தை சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மனைவி, கணவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாளிகாவத்தை காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

ஒப்பந்தத்தின் மூலம் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தையை வேறு தரப்பினருக்கு வழங்க ஏற்பாடு செய்தமை தொடர்பில் சந்தேக நபர் (இறந்த சிறுமியின் தந்தை) கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்தோடு, கைது செய்யப்பட்ட ஏனையவர்களில் சிறுமியை தத்தெடுக்க ஏற்றுக்கொண்ட 45 வயதுடைய பெண்ணும், அவரது 19 வயது மகள் மற்றும் 15 வயது மகனும் உள்ளடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மர்மமாக உயிரிழந்த 4 வயது பெண் குழந்தை: நால்வர் கைது | Girl Child Dies In Suspicious Manner Four Arrestedசம்பவத்தில் மாளிகாவத்தை லக் செவன அடுக்குமாடி குடியிருப்பில் தற்காலிகமாக வசித்த மொஹமட் ரிப்கான் ஹைசா என்ற குழந்தையே துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.