வவுனியாவில் மாணவனை கண்மூடித்தனமாக தாக்கிய ஆசிரியர்! நான்கு நாட்களின் பின்னர் கைது!

வவுனியாவில் மாணவனை கண்மூடித்தனமாக தாக்கிய ஆசிரியர்! நான்கு நாட்களின் பின்னர் கைது!

வவுனியா சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் இரண்டில் கல்வி பயிலும் மாணவன் மீது ஆசிரியர் கண்மூடித்தனமாக தாக்கியதில் மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நான்கு நாட்களின் பின்னர் குறித்த ஆசிரியர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த ஆசிரியர் இன்று(07) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த மூன்றாம் திகதி பாடசாலை முடிந்து வீட்டிற்கு சென்ற சிறுவனின் முகத்திலும் தலையிலும் அடிகாயங்கள் காணப்பட்டதை அடுத்து பெற்றோர் சிறுவனிடம் விசாரித்ததில் அவரது ஆசிரியை தாக்கியதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சிறுவனின் தந்தை குறித்த ஆசிரியருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சிறுவனை தாக்கியதற்கான காரணம் என்ன மற்றும் காலிற்கு கீழ் அடித்து இருக்கலாமே என்றும் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் மாணவனை கண்மூடித்தனமாக தாக்கிய ஆசிரியர்! நான்கு நாட்களின் பின்னர் கைது | Vavuniya Grade Two Students Attack Teacher Arrest

இதற்கு பதிலளித்த ஆசிரியர், உங்கள் மகனுக்கு அ, ஆ தெரியவில்லையென்றும், அதனாலேயே அடித்ததாகவும் மற்றும் அடிக்கும் போது சிறுவன் அங்கும் இங்கும் ஓடியதால் முகத்தில் அடிபட்டுவிட்டது என்றதோடு மகனுக்கு அடிக்காமல் கொஞ்சுவதா என ஆசிரியர் கேட்டுள்ளார்.

காயமடைந்த சிறுவன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டமையுடன் காவல்துறையினரிடம் முறைப்பாடு அழிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் மாணவனை கண்மூடித்தனமாக தாக்கிய ஆசிரியர்! நான்கு நாட்களின் பின்னர் கைது | Vavuniya Grade Two Students Attack Teacher Arrestஇந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக சிறுவன் மீது தாக்குதல் மேற்கொண்ட ஆசிரியரை கைது செய்யப்படாமையினால் சமூக வலைத்தளங்களில் காவல்துறையினருக்கு எதிரான கருத்துக்கள் வலுப்பெற்றிருந்தன.

இதையடுத்து வவுனியா ஈச்சங்குளம் காவல்துறையினர் இன்று காலை குறித்த ஆசிரியரை கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.