10ஆம் திகதிக்கு முன் கொடுப்பனவு; அரச ஊழியர்களுக்கு வெளியான நற்செய்தி..!

10ஆம் திகதிக்கு முன் கொடுப்பனவு; அரச ஊழியர்களுக்கு வெளியான நற்செய்தி..!

அரச ஊழியர்களின் ஏப்ரல் மாதத்திற்கான கொடுப்பனவு எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கொடுப்பனவில் 2024ஆம் ஆண்டு பாதீட்டு திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகரிக்கப்பட்டுள்ள அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவும் உள்ளடக்கியுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி ஒவ்வொரு பணியாளருக்கும் கூடுதலாக 10,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும்.

அத்துடன், ஏப்ரல் மாதத்திற்கான ஓய்வூதியமும் 10ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.