ஏப்ரல் 15 ஆம் திகதி பொது விடுமுறையா..? அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

ஏப்ரல் 15 ஆம் திகதி பொது விடுமுறையா..? அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

ஏப்ரல் 15 ஆம் திகதியினை பொது விடுமுறை தினமாக பிரகடனப்படுத்துவதற்கு எவ்வித தீர்மானமும் இதுவரை எடுக்கப்படவில்லை என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த (Ashoka Priyantha) தெரிவித்துள்ளார்.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் ஏப்ரல் 15 ஆம் திகதியை பொது விடுமுறை தினமாக பிரகடனப்படுத்துமாறு அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த ஆண்டு (2024) சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு வார இறுதி நாட்களில் வருவதனால் அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் திங்கட்கிழமை (15) பொது விடுமுறையை கோரியுள்ளனர்.

இந்நிலையில், இது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் சிறிலங்கா அதிபருடன் கலந்துரையாடவுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த (Ashoka Priyantha) தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்களுக்கான பொது விடுமுறையில் சிக்கல் | No Decision To Declare April 15 As Public Holidayஎனவே, ஏப்ரல் 15ஆம் திகதியை பொது விடுமுறையாக அறிவிப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.