அரசியலிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து மகிந்தவின் அறிவிப்பு

அரசியலிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து மகிந்தவின் அறிவிப்பு

அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்ளும் உத்தேசம் தமக்கு கிடையாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் காலங்களிலும் செயற்பாட்டு அரசியலில் ஈடுபட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அரசியலிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து மகிந்தவின் அறிவிப்பு | Mahinda Retireing From Politics

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்குமாறு இதுவரையில் தம்மிடம் எவரும் கோரவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி அல்லது வேறு கட்சியின் அரசியல் தலைவர்கள் எவரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்குமாறு கோரியதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியலிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து மகிந்தவின் அறிவிப்பு | Mahinda Retireing From Politicsபல அரசியல்வாதிகள் தம்மை சந்திக்க வருவதாகவும் , அவர்கள் தமது சகல நலன்களை விசாரித்து செல்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.