சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு விசேட சுற்றறிக்கை

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு விசேட சுற்றறிக்கை

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்குத் தேவையான ஆதரவையும் பங்களிப்பையும் வழங்குமாறு சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பணிப்புரை விடுத்துள்ளார்.

குறித்த காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளை பராமரித்தல் தொடர்பாக மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை மூலம் இந்த பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு விசேட சுற்றறிக்கை | Special Circular On The Occasion Chitrai New Year

புத்தாண்டுடன் இணைந்த நீண்ட விடுமுறை காலத்தில் அனர்த்தம், அவசர தேவைகள் மற்றும் ஏனைய அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசின் வளர்ச்சித் திட்டங்களும் தடையின்றி பராமரிக்கப்பட வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.