வாளால் அச்சுறுத்திய நபரை சுட்டுக்கொன்ற காவல்துறையினர்: தென்னிலங்கையில் சம்பவம்

வாளால் அச்சுறுத்திய நபரை சுட்டுக்கொன்ற காவல்துறையினர்: தென்னிலங்கையில் சம்பவம்

மாவனெல்லை - பதீதொர கிராமத்தில் வசிப்பவர்களை அச்சுறுத்தி பெண்ணொருவரைப் பிணைக் கைதியாக வைத்து கைது செய்யச் சென்ற இரண்டு காவல்துறையினரை வாளால் தாக்கிய நபர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நபர் வாள் ஏந்தி மக்களை அச்சுறுத்துவதாக கிடைத்த இரகசிய தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், பெண் ஒருவரை பிணைக் கைதியாக வைத்திருப்பதை கண்டுள்ளனர்.

அதனை தொடர்ந்து குறித்த பெண்ணை காவல்துறையினர் காப்பாற்ற முற்பட்ட போது சந்தேகநபர் அவர்களை வாளால் தாக்கியதையடுத்து தற்காப்புக்காக காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

அதன்போது, ஜயதிலக்க என்ற 52 வயதுடைய சந்தேகநபர் உயிரிழந்துள்ளார்.

வாளால் அச்சுறுத்திய நபரை சுட்டுக்கொன்ற காவல்துறையினர்: தென்னிலங்கையில் சம்பவம் | Man Attacked Police With Sword Shot Dead By Policeஇந்நிலையில், சம்பவத்தில் வெட்டுக்காயங்களுக்கு உள்ளான இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்களும் மாவனெல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.