முன்னாள் காதலனை பொலிஸாரிடம் சிக்க வைக்க இளம் தாதியின் மோசமான செயல்

முன்னாள் காதலனை பொலிஸாரிடம் சிக்க வைக்க இளம் தாதியின் மோசமான செயல்

கொழும்பின் (Colombo) புறநகர் பகுதியான பிலியந்தலையில் முன்னாள் காதலனை பொலிஸாரிடம் சிக்க வைக்க முயற்சித்த இளம் தாதி உட்பட குடும்பத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னாள் காதலன் குழுவொன்று வருகைத்தந்து தாக்குதல் மேற்கொண்டு அணிந்திருந்த தங்க நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டதாக தாதி ஒருவர் பெற்றோருடன் சென்று முறைப்பாடு செய்துள்ளார்.

எனினும் அந்த முறைப்பாடு போலியானதெனவும் பொலிஸாரை தவறாக வழிநடத்தியதற்காகவும் தாதி உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களில் முறைப்பாடு செய்த தாதி, அவரின் தாய், தந்தை மற்றும் உறவினரான பாடசாலை மாணவரும் அடங்குவதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் காதலனை பொலிஸாரிடம் சிக்க வைக்க இளம் தாதியின் மோசமான செயல் | Nurse Bad Activity In Colombo Lover Arrests

கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறி தாதி அணிந்திருந்த சுமார் 3 லட்சம் ரூபா பெறுமதியான வளையல் மற்றும் தங்க நகைகள் என்பன அவரது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

காதல் விவகாரம் காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதையடுத்து இரு பிரிவினரிடையே சண்டை ஏற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் நிலையம் சென்ற தாதி மற்றும் குடும்பத்தினர் முன்னாள் காதலன் தாக்கிவிட்டு தங்கத்தை கொள்ளையடித்து விட்டு சென்றுவிட்டதாகவும் முறைப்பாடு செய்துள்ளனர்.

முன்னாள் காதலனை பொலிஸாரிடம் சிக்க வைக்க இளம் தாதியின் மோசமான செயல் | Nurse Bad Activity In Colombo Lover Arrests

எனினும் குறித்த யுவதியிடமும் ஏனையவர்களிடமும் விசாரணை நடத்திய குற்றப்பிரிவு நிலைய பொறுப்பதிகாரி அவர்களின் வாக்குமூலங்கள் பொய்யானது என்பதை சில நிமிடங்களிலேயே உணர்ந்துள்ளனர்.

முன்னாள் காதலனை சட்டத்தின் முன் கொண்டுவருவதற்காகவே அவ்வாறு செய்ததாக தெரியவந்த நிலையில் குடும்பத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.