வைத்தியசாலையில் தாய் உறங்கிய நேரத்தில் சிறுமிக்கு நேர்ந்த கதி

வைத்தியசாலையில் தாய் உறங்கிய நேரத்தில் சிறுமிக்கு நேர்ந்த கதி

கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பத்து வயது சிறுமியை தவறாக நடத்திய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கைது நடவடிக்கை நேற்று (05) மாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த சிறுமியின் பக்கத்து படுக்கையில் சிகிச்சை பெற்று வந்த அவரின் தந்தையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வைத்தியசாலையில் தாய் உறங்கிய நேரத்தில் சிறுமிக்கு நேர்ந்த கதி | Child Abuse Case In Sri Lanka 

இதேவேளை, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் உறங்கிக் கொண்டிருந்த வேளையில், சந்தேகநபர் சிறுமியிடம் தவறாக நடந்துகொண்டுள்ளார்.

அதனை தாயாரிடம் கூறியதையடுத்து வைத்தியசாலை அதிகாரிகள் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

அதன்படி, காலி பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று சென்று 39 வயதுடைய சந்தேகநபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.