முடக்கப்பட்ட கல்வி அமைச்சின் இணையத்தளம்: விசாரணைகளை ஆரம்பித்துள்ள தொலைத்தொடர்பு ஆணைக்குழு

முடக்கப்பட்ட கல்வி அமைச்சின் இணையத்தளம்: விசாரணைகளை ஆரம்பித்துள்ள தொலைத்தொடர்பு ஆணைக்குழு

இலங்கை கல்வி அமைச்சின் (Ministry of education) உத்தியோகபூர்வ இணையத்தளத்தை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஊடுருவியமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த இணையத்தளம் நேற்று (04.04.2024) ஹேக் (Hack) செய்யப்பட்டதை தொடர்ந்தே இலங்கை கணினி அவசரநிலை தயார் நிலை குழு (SLCERT) மற்றும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணைக்குழு (TRCSL) உட்பட பல தரப்பினரால் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இணையத்தள பாவனையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களுக்கு வருத்தம் வெளியிட்டுள்ள கல்வி அமைச்சு, உத்தியோகபூர்வ இணையத்தளத்தை கூடிய விரைவில் மீளமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.

investigation-ministry-of-education-website-

"அநாமதேய EEE" (Anonymous EEE) என்ற பெயரால் ஊடுருவிய நபர் கணினியில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை முன்னிலைப்படுத்தி, அங்கீகரிக்கப்படாத அணுகலுக்கு மன்னிப்புக் கேட்டு ஒரு செய்தியை அனுப்பியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.