290 ரூபாவை நெருங்கும் அமெரிக்க டொலர்

290 ரூபாவை நெருங்கும் அமெரிக்க டொலர்

நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(05.04.2024) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் உயர்வடைந்துள்ளதுடன் டொலரின் பெறுமதியில் தொடர்ந்தும் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (05.04.2024) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை  304.28 ரூபாவாகவும், கொள்வனவு விலை 294.92 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

dollar rate in sri lanka

மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 225.59 ரூபாவாகவும், கொள்வனவு விலை 215.90 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 331.18 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 317.59 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

dollar rate in sri lanka

அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 385.84 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி  370.86 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதேவேளை,  அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுதியானது படிப்படியாக 290 ரூபாவை நெருங்கி வருகின்றது.