அதிகாலையில் துயர சம்பவம்: திடீரென உயிரிழந்த பல்கலைக்கழக இறுதி ஆண்டு மாணவன்!

அதிகாலையில் துயர சம்பவம்: திடீரென உயிரிழந்த பல்கலைக்கழக இறுதி ஆண்டு மாணவன்!

மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் இறுதி ஆண்டில் பயின்று வரும் மாணவரொருவர் இன்றையதினம் (05-04-2024) அதிகாலை உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

குறித்த மாணவன் திடீர் சுகவீனம் காரணமாக இன்றையதினம் பிலியந்தலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அதிகாலையில் துயர சம்பவம்: திடீரென உயிரிழந்த பல்கலைக்கழக இறுதி ஆண்டு மாணவன்! | Moratuwa University Final Year Student Diedஇருப்பினும், மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னரே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்த பல்கலைக்கழக மாணவன் ஹாலிஎல பகுதியைச் சேர்ந்த வினோஜ்குமார் என தெரியவந்துள்ளது.

சடலம் மீதான பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளதுடன், பொலிஸாரிடம் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.