புத்தாண்டு காலத்தில் சொந்த ஊர்களுக்கு செல்ல காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு

புத்தாண்டு காலத்தில் சொந்த ஊர்களுக்கு செல்ல காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இன்று (05) முதல் விசேட பேருந்து சேவை இடம்பெறவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச (Banduga Swarnahansa) தெரிவித்துள்ளார்.

பண்டிகைக் காலங்களில் கிராமங்களுக்குச் செல்லும் மக்களின் வசதிக்காக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, சுமார் 200 சிறப்புப் பேருந்துகள் கொழும்பில் இருந்து நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் சேவையில் ஈடுபடும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Special bus service for the festive season

இதேவேளை, பண்டிகை காலத்தை முன்னிட்டு 10 ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை தினமும் 12 விசேட தொடருந்தினை சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இண்டிபோலகே தெரிவித்துள்ளார்.