நடிகை தமிதாவும் அவரது கணவரும் சி.ஐ.டியினரால் கைது

நடிகை தமிதாவும் அவரது கணவரும் சி.ஐ.டியினரால் கைது

தென்னிலங்கை நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர் ஆகியோர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று மதியம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொரியாவில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி 30 இலட்சம் ரூபா நிதி மோசடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டு இவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிதா அபேரத்னவும் அவரது கணவரும் இன்று பிற்பகல் கோட்டை நீதவான் நீதிமன்றத்துக்கு வருகை தந்திருந்தனர்.

அதன்பின்னரே அவர்கள் சி.ஐ.டியினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நடிகை தமிதாவும் அவரது கணவரும் சி.ஐ.டியினரால் கைது | Actress Tamita And Her Husband Arrested

இதற்கமைய இருவருக்கும் வெளிநாடு செல்வதற்கு நேற்று தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.