தமிழ் பாடசாலை ஒன்றில் நடந்த அசம்பாவிதம்... பரிதாபமாக உயிரிழந்த மாணவன்!

தமிழ் பாடசாலை ஒன்றில் நடந்த அசம்பாவிதம்... பரிதாபமாக உயிரிழந்த மாணவன்!

மஸ்கெலியாவில் உள்ள கார்ட்மோர் தமிழ் வித்தியாலயத்தில் கொங்கிரீட் குழாய் ஒன்று சரிந்து விழுந்த சம்பவத்தில் மாணவர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்ட்மோர் தோட்டத்தில் மலசலகூடத்திற்கான குழியை வெட்டுவதற்குப் பயன்படும் கொங்கிரீட் குழாய்களை பாடசாலை வளாகத்தில் இறக்கி வைத்துள்ளனர்.

தமிழ் பாடசாலை ஒன்றில் நடந்த அசம்பாவிதம்... பரிதாபமாக உயிரிழந்த மாணவன்! | Student Dies Concrete Pipe Collapses Maskeliyaஇதன்போது சில மாணவர்கள் குறித்த கொங்கிரீட் குழாய்கள் மீது ஏறி விளையாடியபோது குழாய் ஒன்று மாணவர் ஒருவர் மீது சரிந்து விழுந்ததில் மாணவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இதையடுத்து அந்த மாணவர் பாடசாலை ஆசிரியர்களால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அவர் இடைநடுவில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.