ஆசிரியர் நியமனம் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்

ஆசிரியர் நியமனம் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்

உயர் தொழில்நுட்ப கல்வி டிப்ளோமா முடித்த 500 பேரை ஆங்கில ஆசிரியர்களாக நியமிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்த தீர்மானம் நாடளாவிய ரீதியில் உள்ள ஆங்கில ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையிலேயே மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

2021ஆம் ஆண்டு நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் இந்த ஆட்சேர்ப்பு செய்யப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆசிரியர் நியமனம் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள தகவல் | 500 English Teachers To Join Ministry Of Education

தற்போது ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்கள் உள்ள தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளுக்கு அவர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

ஏப்ரல் விடுமுறைக்கு பின்னர் மேல் மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட பரீட்சையில் சித்தியடைந்த அனைவருக்கும் நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.