குளத்தில் மிதக்கும் பெண்ணின் சடலம் - பொலிஸார் விசாரணை

குளத்தில் மிதக்கும் பெண்ணின் சடலம் - பொலிஸார் விசாரணை

இராகலை (Ragala) குளத்தில் சடலமொன்று மிதப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சடலமானது இன்று (3.4.2024) இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்மார் மேற்பிரிவு குளத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மிதக்கும் குறித்த சடலம் பெண் ஒருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் குளத்தில் சடலமொன்று மிதப்பதாக பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

dead body found in pond ragala

மேலும் நுவரெலியா மாவட்ட நீதவான் ஸ்தலத்துக்கு சென்று சடலத்தை பார்வையிட்டதன் பின்னர், சடலம் குளத்தில் இருந்து மீட்கப்படும் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த நபர் குளத்தில் பாய்ந்து உயிரிழந்தாரா? அல்லது அந்த நபரை எவராவது கொலை செய்து குளத்தில் போட்டிச் சென்றார்களா என்பது தொடர்பாக பலகோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

மேலும், மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.