சித்தரைப் புத்தாண்டுக்கு முன்னர் அஸ்வெசும கொடுப்பனவு
சித்தரைப் புத்தாண்டுக்கு முன்னர் அஸ்வெசும கொடுப்பனவு என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.
கேகாலை, நுவரெலியா, பதுளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு திட்டத்தின் கீழ் 2500 ரூபாவைப் பெற்றுக் கொள்வதற்கு தகுதி பெற்ற பயனாளிகள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் அவர்களுக்கு சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னர் குறித்த கொடுப்பனவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டி தெரிவித்தார்.
இந்த மாவட்டங்களில் அஸ்வெசும பயனாளிகள் தெரிவு செய்யப்பட்ட போது, குறைந்த புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட பெறுமளவானவர்கள் பெயர்பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்தமையால், அந்த மாவட்டங்களுக்கான கோட்டாவை விட உயர் மட்டத்தில் காணப்பட்டமையால் இந்த நெருக்கடி ஏற்பட்டிருந்தது.
எவ்வாறிருப்பினும் இம்மாதம் முதல் வாரத்துக்குள் இந்த சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்படும். அதற்கமைய 2500 ரூபா கொடுப்பனவு தடையின்றி வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
அதோடு கடந்த வாரம் இடம்பெற்ற அஸ்வெசும நலன்புரி சபைக் கூட்டத்தில் இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டி மேலும் தெரிவித்துள்ளார்.