நகைகள் மற்றும் பணத்தை பாதுகாத்துக்கொள்ளவும்: நாட்டு மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்

நகைகள் மற்றும் பணத்தை பாதுகாத்துக்கொள்ளவும்: நாட்டு மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்

எதிர்வரும் புத்தாண்டு காலத்தினை முன்னிட்டு பொது மக்களின் பாதுகாப்பிற்காக விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனவே புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக வெளியில் செல்லும் மக்கள் கொள்ளையர்களிடம் இருந்து தங்களது சொத்துக்கள் மற்றும் நகைகள், பணத்தினை பாதுகாத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

warrning to srilanka peoples

மேலும், பொருட்கள் கொள்வனவிற்காக செல்லும் போது தங்களது பணப்பை மற்றும் நகைகள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பண்டிகைக் காலங்களில் உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள், உணவு வகைகள் மற்றும் பழங்கள் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.