கொழும்பில் மசாஜ் நிலையம் ஒன்றில் சேவை பெறச் சென்றவர் திடீரென உயிரிழப்பு!

கொழும்பில் மசாஜ் நிலையம் ஒன்றில் சேவை பெறச் சென்றவர் திடீரென உயிரிழப்பு!

கொழும்பு - தெஹிவளை பகுதியில் உள்ள மசாஜ் நிலையமொன்றில் சேவை பெறச் சென்ற ஒருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் மஹரகம பிரதான வீதியில் அம்பில்லவத்தை சந்திக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் மசாஜ் நிலையம் ஒன்றில் சேவை பெறச் சென்றவர் திடீரென உயிரிழப்பு! | Person Went Massage Parlor Service Died Colombo

குறித்த நபர் திடீர் சுகவீனம் காரணமாக மசாஜ் நிலையத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் பன்னிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய நபரொருவர் என தெரியவந்துள்ளது.

கொழும்பில் மசாஜ் நிலையம் ஒன்றில் சேவை பெறச் சென்றவர் திடீரென உயிரிழப்பு! | Person Went Massage Parlor Service Died Colombo

மாரடைப்பு காரணமாக குறித்த நபர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.