உயர்தர மாணவனை தகாத முறைக்குட்படுத்திய பெண்!.. பொலிஸில் முறைப்பாடு..!

உயர்தர மாணவனை தகாத முறைக்குட்படுத்திய பெண்!.. பொலிஸில் முறைப்பாடு..!

கல்வி கற்கும் இளைஞன் ஒருவரை தவறான முறைக்குட்படுத்தியுள்ளதாக 46 வயதுப் பெண்ணொருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் களுத்துறை - வரக்காகொட பகுதியில் இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

இத்தாலியில் நீண்டகாலமாக வசித்து வந்த 46 வயதான திருமணமாகாத பெண் ஒருவர், தனது அயல்வீட்டில் வசிக்கும், இரண்டாவது தடவையாக க.பொ.த உயர்தரப்பரீட்சை எடுப்பதற்குத் தயாரான இளைஞன் ஒருவருடன் நெருக்கமான பழக்கம் ஏற்படுத்திக் கொண்டுள்ளார். 

குறித்த பெண், அந்த இளைஞனுக்கு ஐபோன் மற்றும் பல பரிசுப்பொருட்களை கொடுத்து அவனுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். 

குறித்த பெண்ணுடன் பழகுவதை நிறுத்துமாறு இளைஞனின் தாயார் தனது மகனை வற்புறுத்திய நிலையில், இளைஞன், தாயார் மற்றும் சகோதரிகளை விட்டு அந்த பெண்ணுடனேயே தங்கியுள்ளார். 

இந்நிலையில், சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுத்து தனது மகனை தன்னிடம் மீட்டுத் தருமாறு இளைஞனின் தாய் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.