அரச ஊழியர்கள் ஒரு தொகுதியினருக்கு சம்பளத்திற்காக ஒதுக்கப்பட்ட அறுபத்தொரு கோடி ரூபா பணம்!!
இலங்கை முதலீட்டுச் சபையானது, 2022ஆம் ஆண்டு ஊழியர்களுக்கான பல்வேறு கொடுப்பனவுகளுக்காக கிட்டத்தட்ட 61 கோடி ரூபாவை செலவிட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் தேசிய கணக்காய்வு அலுவலகத்தால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, ஊழியர்களின் ஊக்கத்தொகைக்காக 7 கோடி ரூபாயும் ஏனைய கொடுப்பனவுகளுக்காக 54 கோடி ரூபாயும் செலவிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், குறித்த கொடுப்பனவுகளை அமைச்சரவையின் அனுமதியை பெற்றிருக்க வேண்டும் என நிதி அமைச்சகத்தால் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
ஆனால், இலங்கை முதலீட்டுச் சபையின் நிர்வாகத்தினால் அமைச்சரவை மற்றும் திறைசேரியில் எவ்வித அனுமதியும் பெறப்படவில்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.