14 வயது சிறுமியை தகாத உறவுக்குட்படுத்திய தந்தை! தமிழர் பகுதியில் நடந்த கொடூரம்..!

14 வயது சிறுமியை தகாத உறவுக்குட்படுத்திய தந்தை! தமிழர் பகுதியில் நடந்த கொடூரம்..!

வவுனியா, தோணிக்கல் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 14 வயது சிறுமி ஒருவரிடம் தகாத முறையில் நடந்துகொண்டமை தொடர்பில் சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

பாதிக்கப்பட்ட சிறுமி நேற்றைய தினம் (21.03) பாடசாலைக்கு சென்று தனது சக மாணவி ஊடாக தான் தகாத உறவுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தை ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, குறித்த விடயம் தொடர்பில் பாடசாலையினால் வவுனியா காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, துரிதமாக செயல்பட்ட காவல்துறையினர் சிறுமியை விசாரணை செய்ததில், சிறுமியின் தாய் வீட்டில் இல்லாத போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

14 வயது சிறுமியை தகாத உறவுக்குட்படுத்திய தந்தை! தமிழர் பகுதியில் நடந்த கொடூரம் | Father Molested A 14 Year Old Girl In Vavuniyaசம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தையான 36 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சிறுமி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் வவுனியா தலைமைப் காவல்நிலைய சிறுவர், பெண்கள் பிரிவு காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.