கிணற்றில் தவறி வீழ்ந்து 3 வயது சிறுவன் உயிரிழப்பு

கிணற்றில் தவறி வீழ்ந்து 3 வயது சிறுவன் உயிரிழப்பு

வட்டவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பின்ஓய மேல் பிரிவில் சிறுவன் ஒருவன் கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் வட்டவளை பிரதேசத்தை சேர்ந்த 3 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் வீடொன்றில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் காணாமல் போனதையடுத்து சிறுவனின் தந்தையும் தோட்டத்தில் வேலை செய்பவர்களும் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது, சிறுவன்  வீட்டின் பின்புறத்தில் உள்ள  கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கிணற்றில் தவறி வீழ்ந்து 3 வயது சிறுவன் உயிரிழப்பு | A 3 Year Old Boy Died After Falling Into A Well

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.