தமிழர் பகுதியில் சிறுமியிடம் மோசமாக நடந்துகொண்ட தந்தை... உடந்தையாக இருந்த தாய்!

தமிழர் பகுதியில் சிறுமியிடம் மோசமாக நடந்துகொண்ட தந்தை... உடந்தையாக இருந்த தாய்!

வவுனியாவில் உள்ள தோணிக்கல் பகுதியில் மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டின் சந்தேகத்தின் பேரில் தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

தமிழர் பகுதியில் சிறுமியிடம் மோசமாக நடந்துகொண்ட தந்தை... உடந்தையாக இருந்த தாய்! | Father Abused Daughter Vavuniya Mother Accomplice

பாடசாலைக்கு சென்ற பாதிக்கப்பட்ட சிறுமி ஆசிரியையிடம் இன்றையதினம் (21-03-2024) காலை தான் விழித்தெழும்போது ஆடையின்றி இருந்ததாக தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பாக வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்திற்கு பாடசாலையால் தகவல் வழங்கப்பட்டிருந்தது.

விரைந்து செயற்பட்ட பொலிஸார் சிறுமியை விசாரனை செய்ததில் சிறுமியின் தந்தையான 36 வயதுடையவரை கைது செய்துள்ளனர்.

தமிழர் பகுதியில் சிறுமியிடம் மோசமாக நடந்துகொண்ட தந்தை... உடந்தையாக இருந்த தாய்! | Father Abused Daughter Vavuniya Mother Accompliceசிறுமியின் தாய் வீட்டில் இல்லாத போது இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், இதற்கு முன்னரும் சிறுமி பலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார் எனவும் அது தொடர்பாக தாயிடம் தெரிவித்தும் தாயார் அதனை கருத்தில் கொள்ளவில்லை என்று பாதிக்கப்பட்ட சிறுமி தெரிவித்துள்ளார்.

தமிழர் பகுதியில் சிறுமியிடம் மோசமாக நடந்துகொண்ட தந்தை... உடந்தையாக இருந்த தாய்! | Father Abused Daughter Vavuniya Mother Accomplice

இதனடிப்படையில் சிறுமியின் தாயாரையும் கைது செய்யும் முயற்சியை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை வவுனியா தலைமை பொலிஸ் நிலைய சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயத்திலக்க தலமையிலான சிறுவர் மற்றும் பெண்கள் குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் பொறுப்பதிகாரியின் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.