இலங்கை வானிலையில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கை வானிலையில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலையில் நாளை (21-03-2024) முதல் மாற்றம் ஏற்படும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கிழக்கு ஊவா மற்றும் வட மாகாணங்களில் பல இடங்களில் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கை வானிலையில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Change In Weather Conditions In Sri Lanka Tomorrowமேற்கு, சப்ரகமுவ, மத்திய, ஊவா, தெற்கு, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இதேவேளை, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கை வானிலையில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Change In Weather Conditions In Sri Lanka Tomorrowமேலும், இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை கோரியுள்ளது.