அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட ரணில்

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட ரணில்

“எவ்வளவு பொருளாதார சிரமங்கள் இருந்தாலும் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்” என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கேகாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த சிங்கள, தமிழ் புத்தாண்டுக்குள் அரச ஊழியர்களின் சம்பளம் 10,000 ரூபாவால் அதிகரிக்கப்படும். அதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அஸ்வெசும திட்டத்தின் மூலம் சமுர்த்தியின் மூன்று மடங்கு நன்மைகளை மக்களுக்கு வழங்குவதுடன், பயனாளி குடும்பங்களின் எண்ணிக்கை பதினெட்டு இலட்சத்தில் இருந்து இருபத்தி நான்கு இலட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் கூற வேண்டும்.

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட ரணில் | Happy Announcement To The Government Employeesஇறக்குமதிக்கும் ஏற்றுமதிக்கும் இடையிலான இடைவெளியை ஈடுசெய்யும் வகையில் கடன் வாங்குவது தொடர்ந்தால் இன்னும் 10 வருடங்களில் இலங்கை மீண்டும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார். 

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட ரணில் | Happy Announcement To The Government Employees