மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு விவகாரம்: வெளியான தகவல்

மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு விவகாரம்: வெளியான தகவல்

மத்திய வங்கியின் சம்பள அதிகரிப்பை மீள்பரிசீலனை செய்யுமாறு நாடாளுமன்ற நிதிக்குழு விடுத்த கோரிக்கை தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க அனைத்து ஊழியர்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் அறிவித்துள்ளார்.

மத்திய வங்கி ஆளுநர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த சம்பள அதிகரிப்பை மீள்பரிசீலனை செய்து அறிக்கை தருமாறு நாடாளுமன்ற நிதிக்குழு மத்திய வங்கியின் நிர்வாக சபைக்கு பரிந்துரை செய்துள்ளது.

இது தொடர்பில், மத்திய வங்கியின் ஆளுநர் மத்திய வங்கி அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு விவகாரம்: வெளியான தகவல் | Central Bank Officers Salaries Of Increased இதன்படி, மீளாய்வுக்கு பின்னர், நாடாளுமன்ற நிதிக்குழுவிடம் மத்திய வங்கி அறிக்கையை சமர்ப்பிக்கும் எனவும் எதிர்பார்க்கின்றது.

மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு விவகாரம்: வெளியான தகவல் | Central Bank Officers Salaries Of Increased எவ்வாறாயினும், அதிகரிக்கப்பட்டுள்ள மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க முன்மொழிந்துள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளில் உண்மையில்லை எனவும் மத்திய வங்கியின் உயர்மட்ட வட்டாரம் தெரிவித்துள்ளது.

மேலும், மத்திய வங்கி ஆளுநர் தனிப்பட்ட முறையில் அவ்வாறான பிரேரணை எதனையும் சமர்ப்பிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.