சலூனில் பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த கும்பல்! முகம் சுளிக்க வைக்கும் சம்பவம்

சலூனில் பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த கும்பல்! முகம் சுளிக்க வைக்கும் சம்பவம்

முடிதிருத்தம் செய்யும் நிலையம் ஒன்றில் 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சம்பவம் ஒன்று அநுராதபுரத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

சலூனில் பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த கும்பல்! முகம் சுளிக்க வைக்கும் சம்பவம் | Gang Rape A Schoolgirl In A Saloon Anuradhapuraஇச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் முடிதிருத்தும் நிலையத்தின் உரிமையாளரையும் மற்றுமொருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி, பாதிக்கப்பட்ட சிறுமியிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போதே இந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

சலூனில் பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த கும்பல்! முகம் சுளிக்க வைக்கும் சம்பவம் | Gang Rape A Schoolgirl In A Saloon Anuradhapuraகைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் அனுராதபுரம் பிரதான நீதவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதிபதி நாலக சஞ்சீவ ஜயசூரிய முன்னிலையில் இன்று (18) ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பந்தப்பட்ட முடிதிருத்தும் நிலையத்திற்கு பின்னால் உள்ள அறையில் இந்த குற்றச்செயல் நடந்துள்ளதுடன், சந்தேகநபர்கள் இருவரைத் தவிர, 11 சந்தேக நபர்களின் பெயர்களை சிறுமி பொலிஸாரிடம் வெளிப்படுத்தியுள்ளார்.

சலூனில் பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த கும்பல்! முகம் சுளிக்க வைக்கும் சம்பவம் | Gang Rape A Schoolgirl In A Saloon Anuradhapuraஇதன்படி, சந்தேகநபர்கள் 11 பேரையும் கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.