எரிபொருளுக்கு மீண்டும் வரிசையில் நிற்கும் நிலை..!

எரிபொருளுக்கு மீண்டும் வரிசையில் நிற்கும் நிலை..!

அதிபர் தேர்தலில் தேசிய தலைவராகவே ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவார், அத்தோடு மக்கள் அவருக்கு ஆதரவளிக்காவிட்டால் எரிபொருட்களுக்கு மீண்டும் வரிசையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டே ஆகுமென ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று முன்தினம்(16) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், அரசியலமைப்பின் பிரகாரம் அதிபர் தேர்தல் இடம்பெற வேண்டும்.

அதன் பிரகாரம் இந்த வருடம் ஒக்டோபர் மற்றும் செப்டம்பர் மாதத்துக்குள் தேர்தல் இடம்பெறும்.

எரிபொருளுக்கு மீண்டும் வரிசையில் நிற்கும் நிலை : வஜிர அபேவர்தன சுட்டிக்காட்டு | Petrol Diesel Will Queuing Again Sri Lankaஎன்றாலும் அதிபர் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற வேண்டும் என சில குழுக்கள் தெரிவித்து வருகின்றன.

அவர்கள் வெளிநாடுகளின் தேவைக்காகவே இவ்வாறு பிரசாரம் செய்து வருகின்ற நிலையில் இவர்கள் தொடர்பாக மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

 நாட்டில் அடுத்து இடம்பெறும் அதிபர் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடி பரந்துபட்ட கூட்டணியை அமைக்க இருக்கிறோம்.

அதில் ரணில் விக்ரமசிங்க தேசிய தலைவராக தேர்தலில் போட்டியிட நடவடிக்கை எடுத்து வருகிறோம். தேசிய தலைவருக்கு மக்கள் ஆதரவளிக்காவிட்டால் எரிபொருளுக்காக மக்கள் மீண்டும் வரிசையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டே ஆகும். 

ஆகையால் அந்த பொறுப்பையும் அவர்கள் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்" என அவர் தெரிவித்துள்ளார்.