தமிழர் பகுதியொன்றில் பயங்கர விபத்து: குடும்பஸ்தர் உயிரிழப்பு! 4 பேர் வைத்தியசாலையில்

தமிழர் பகுதியொன்றில் பயங்கர விபத்து: குடும்பஸ்தர் உயிரிழப்பு! 4 பேர் வைத்தியசாலையில்

திருகோணமலையில் உள்ள பகுதியொன்றில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து சம்பவம் இன்றைய தினம் (17-03-2024) மாலை திருகோணமலை - புகையிரத நிலையத்துக்கு அருகிலுள்ள கிறிஸ்தவ ஆலயத்திற்கு முன்னால் இடம்பெற்றுள்ளது.

தமிழர் பகுதியொன்றில் பயங்கர விபத்து: குடும்பஸ்தர் உயிரிழப்பு! 4 பேர் வைத்தியசாலையில் | Trincomalee Motor Cycle Accident Family Man Died

இரு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது பின்புறமாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதாகவும் மூவர் மதுபோதையில் வேகமாக வந்தமையினால் இவ்விபத்து இடம்பெற்றதாகவும் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

தமிழர் பகுதியொன்றில் பயங்கர விபத்து: குடும்பஸ்தர் உயிரிழப்பு! 4 பேர் வைத்தியசாலையில் | Trincomalee Motor Cycle Accident Family Man Diedகுறித்த விபத்தில் திருகோணமலை - கோனேஸபுரி ஆறாம் கட்டையைச் சேர்ந்த 39 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தை ஏ.தேவானந் என்பவரே உயிரிழந்துள்ளார்.

மேலும் மோட்டார் சைக்கிளில் அவருடன் பயணித்து அதே பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய யூ.தனூஸன் காயமடைந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

தமிழர் பகுதியொன்றில் பயங்கர விபத்து: குடும்பஸ்தர் உயிரிழப்பு! 4 பேர் வைத்தியசாலையில் | Trincomalee Motor Cycle Accident Family Man Diedஇதேவேளை, வேகமாக சென்று கொண்டிருந்த மற்றைய மோட்டார் சைக்கிள் பயணித்த 21, 30,39 வயதுடைய மூவரும் படுகாயமடைந்துள்ளதாக நிலையில் மொத்தமாக 4 பேர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.